222
நாம் கொண்டாடும் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் சிங்கள தேசத்தில் பெரும் சர்ர்சையை ஏற்படும் என தெரிந்து கொண்டுதான் அவற்றை நாம் கொண்டாடுகின்றோம். என வடமாகாண சபை ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
வல்வெட்டித்துறையில் உள்ள தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் வீடு அமைந்திருந்த காணியின் முன்பாக இன்றைய தினம் கேக் வெட்டிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் ,
சர்வதேச நாடுகள் மாத்திரமல்ல சிங்கள தலைமைகள் கூட தமிழீழ தேசிய தலைவரின் ஆளுமைகளை போற்றுகின்றனர். தமிழ் மக்களுக்கு பிரச்சனை இருக்கின்றது என்பதனை ஐநா வரை கொண்டு சென்றவர்.
நாம் கொண்டாடும் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் சிங்கள தேசத்தில் பெரும் சர்ர்சையை ஏற்படும் என தெரிந்து கொண்டுதான் அவற்றை நாம் கொண்டாடுகின்றோம்.
சிங்கள மக்கள் ஜே.வி.பி.யின் தலைவர் கொல்லப்பட்ட தினத்தினை தேசிய வீரர்கள் தினம் என அனுஸ்டிக்க முடியும் என்றால் , தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடிய தமிழீழ விடுதலை புலிகளின் தலைவரின் பிறந்த நாளை கொண்டாடுவோம்.
ஆகவே தேசிய தலைவரின் பிறந்த நாளை தாயகத்தில் மட்டும் அல்ல
அதேபோல தமிழ் மக்களின் விடுதலைக்காக இன்னுயிரை நீத்த போராளிகள் , மாமனிதர்கள் நாட்டு பற்றாளர்கள் என இந்த மண்ணின் விடுதலைக்காக மடிந்தவர்களை நாம் நினைவு கூறுவோம்.
தமிழர்களின் தாகம் தமிழ் தமிழீழ தாயகம் என மடிந்தவர்கள் அவர்கள் தமிழ் மக்கள் தங்களை தாங்களே ஆள கூடிய தமிழ் தேசியம் சுயநிர்ணயத்தை வென்றெடுப்போம் என உறுதி கூறுகின்றோம். என தெரிவித்தார்.
Spread the love