211
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
கடந்த காலத்தில் ஆட்சியாளர்களோடு சேர்ந்திருந்து தேனிலவு கொண்டாடிய டக்ளஸ் தேவானாந்தா தற்போது பாவமனிப்பு கோருகின்றார். அவருக்கு பாவ மன்னிப்பை கொடுப்பதா இல்லையா என்பதனை தீர்மானிக்க வேண்டியவர்கள் தமிழ் மக்கள் தான் என வடமாகாண சபை ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா கருத்து தெரிவிக்கும் போது, ” தங்களது உறவுகளை நினைத்து உணர்வுகளை வெளிப்படுத்த இடம்கொடுங்கள் , அதற்கு எவரும் தடையாகவோ இடையூராகவோ இருக்க கூடாது என தெரிவித்து இருந்தார்.
இது தொடர்பில் கேட்ட போதே சிவாஜிலிங்கம் அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், கடந்த காலத்தில் ராஜபக்சேக்களின் பங்காளியாக இருந்து அவர்களோடு தேனிலவு கொண்டாடிய போது இவ்வாறான கருத்தை அவர் வெளியிடவில்லை.
முள்ளிவாய்கால் நினைவு தினத்தினை நாம் வடமாகாண சபையின் முன்பாகக் அனுச்டித்தபோது ஏற்றிய சுடரினை சிங்கள காவல்துறை அதிகாரி கீழே தள்ளி விழுத்தி சப்பாத்து காழால் ஏறி மிதித்த போதும் முள்ளிவாய்கால் கடற்கரையில் கடற்படையின் அச்சுறுத்தல்களை மீறி அஞ்சலிகளை செலுத்திய போதும் இராணுவ அச்சுறுத்தல்களின் மத்தியில் மாவீரர்களை நினைவு கூறிய போதிலும் எதனையும் கூறாதவர், இன்றைய காலகட்டத்தில் தானும் ஏதேனும் கூற வேண்டும் என்றோ அல்லது பாவ மன்னிப்பு கோர வேண்டும் என்றோ இதனை கூறி இருக்கலாம். என மேலும் தெரிவித்தார்.
Spread the love