குளோபல் தமிழ்செய்தியாளர்
பியர் விலை குறைப்பிற்கு எதிராக அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட உள்ளதாக சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். பியருக்கான வரி குறைப்பினால் ஏற்படக்கூடிய பாதிப்புக்கள் குறித்த விபரங்கைள உள்ளடக்கிய ஓர் அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
நாளைய தினம் நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிதி அமைச்சர் வரவு செலவுத்திட்டத்தை சமர்ப்பித்து ஆற்றிய உரையின் போது பியர் வரிக்குறைப்பு தொடர்பில் வெளியிட்ட புள்ளிவிபரத்த தகவல்கள் பிழையானவை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பெரும் எண்ணிக்கையிலானவர்கள் நாட்டில் கசிப்பு பயன்படுத்துவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.