152
சவூதி தலைமையிலான கூட்டணி கடந்த மூன்று வாரங்களாக ஏமன் மீது நீட்டித்து வந்த தடையை தளர்த்தியதையடுத்து, உணவு பொருட்களை கொண்டு சென்ற ஐ.நா உதவி கப்பல் ஏமனில் கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள துறைமுகத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
மேற்படி தடையினால் லட்சக் கணக்கான மக்கள் பட்டினியில் உயிரிழச்கும் அபாயம் காணப்படுவதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு மற்றும் மனித உரிமை அமைப்புகள் குற்றம் சுமத்திவந்த நிலையில் தடை நீக்கப்பட்டுள்ளது. சவூதி அரேபியா மீதான ஏவுகணை தாக்குதலையடுத்து, கடந்த நவம்பர் 6 ஆம்திகதி இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
Spread the love