பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியா கொண்டுவந்து மும்பை சிறையில் அடைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ள நிலையில் இதுகுறித்து இங்கிலாந்து நீதிமன்றில் தெரிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது விஜய் மல்லையா பொதுத்துறை வங்கிகளிடம் இருந்து 9 ஆயிரம் கோடி ரூபா கடன் பெற்றுவிட்டு அதனை செலுத்தாமல் இங்கிலாந்தில் தங்கியுள்ளர்.
அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தி அங்குள்ள பல்வேறு நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளை சந்திக்குமாறு செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. கைதிகளை நாடு கடத்தி கொண்டு வருவது தொடர்பாக இந்தியாவுக்கும், இங்கிலாந்துக்கும் இடையே 1992-ம் ஆண்டு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. விஜய் மல்லையாவை நாடு கடத்துவது தொடர்பான விசாரணை லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் மஜிஸ்திரேட் நீதிமன்றில் எதிர்வரும் 4ம் திகதி ஆரம்பமாகவுள்ளது
அப்போது அவரை மும்பை ஆர்தர் ரோடு சிறையில் அடைக்க திட்டமிட்டிருப்பதையும், அந்த சிறை சர்வதேச தரத்தின் அடிப்படையில் உச்சக்கட்ட பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ளது எனவும் மத்திரய அரசு தரப்புகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.