குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யுத்தத்தின் போது உயிர் நீத்த வடக்குப் போராளிகளை நினைவு கூர்வதற்கு அனுமதியளிக்கப்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்கந்தராஜா பாராளுமன்றில் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
வரவு செலவுத்திட்டம் தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தங்களது யுத்த வீரர்களை நினைவு கூர்ந்து அவர்களது கல்லறைகளுக்குச் சென்று அஞ்சலி செலுத்த வடக்கு மக்களுக்கு அனுமதியளிக்கப்பட வேண்டுமென அவர் கோரியுள்ளார்.
மாவீரர் துயிலும் இல்லங்கள் புனரமைப்பதற்கு அனுமதிக்கப்பட வேண்டுமென அவர் கோரியுள்ளார். பெண்கள் சுயதொழில்களில் ஈடுபடுவதற்கு அனுமதிக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.