150
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் ,
சுதந்திரக் கட்சியில் இணைந்து செயற்படப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலோ அல்லது அரசாங்கத்திலோ இணைந்து செயற்படப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கூட்டு எதிர்க்கட்சியில் இணைந்து கொள்ள விரும்பும் சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள், பதவியை ராஜினாமா செய்தே இணைந்து கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்படும் எண்ணம் எப்பொழுதும் கூட்டு எதிர்க்கட்சிக்கு கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.
Spread the love