144
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையினது அனுமதியின்றி உறுப்பினர்கள் ஊடக சந்திப்பு நடத்தக் கூடாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் மாலை பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற சந்திப்பு ஒன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பு நடத்த வேண்டுமாயின் கட்சியின் தலைமையிடம் அதற்கான அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியமானது என அவர் வலியுறுத்தியுள்ளார். உள்ளுராட்சி மன்ற எல்லை நிர்ணயம் தொடர்பிலான வழக்குத் தாக்கல் செய்தவர்களிடம் அந்த மனுவை வாபஸ் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு கட்சி உறுப்பினர்களிடம் தெரிவித்துள்ளார்.
Spread the love