ஆதி திராவிடர் மற்றும் சிறுபான்மையின மக்களுக்கு பாதுகாப்பு இல்லை என பகுஜன் சமாஜ் கட்சி தலைவி மாயாவதி தெரிவித்துள்ளார். பெங்களூருவில் நடைபெற்ற பகுஜன் சமாஜ் கட்சியின் தென் மாநில மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சிறிய காரணங்களுக்காக நாட்டில் ஆதிதிராவிடர்கள், சிறுபான்மையின மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதை தான் வன்மையாக கண்டிப்பதாகவும் இத்தகைய ஒரு பயமான சூழல் நாட்டில் நிலவி வருகிறதெனவும் அவர் தெரிவித்துள்ளார்
இந்த தாக்குதல் சம்பவங்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் எனவும் ஆதிதிராவிடர் சிறுபான்மையின மக்களின் பாதுகாப்புக்காக நாம் போராட வேண்டும் எனவும் மாயாவதி தெரிவித்துள்ளார்.