குளோபல் தமிழச் செய்தியாளர்
வடகொரியா மற்றுமொரு ஏவுகணை பரிசோதனை செய்துள்ளது. நீண்ட தூரம் செல்லக்கூடிய ஏவுகணையொன்றே இவ்வாறு பரீட்சத்து பார்க்கப்பட்டுள்ளது. அமெரிக்காவை தாக்கக் கூடிய வகையில் இந்த ஏவுகணை உருவாக்கப்பட்டுள்ளது. கண்டம் விட்டு கண்டம் தாவக்கூடிய ஏவுகணை ஒன்றே இவ்வாறு பரீட்சீக்கப்பட்டுள்ளது.
Hwasong-15 என்ற ஏவுகணையே இவ்வாறு பரீட்சிக்கப்பட்டுள்ளது. ஏவுகணைப் பரிசோதனை சர்வதேச ரீதியில் கண்டனத்திற்குள்ளாகியுள்ளது. வடகொரியாவின் புதிய ஏவுகணை ஜப்பான் கடலில் வீழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சர்வதேச அளவில் எதிர்ப்புக்கள் வெளியிடப்பட்டு வரும் நிலையில் வடகொரியா தொடர்ச்சியாக ஏவுகணைகளை பரிசோதனை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.