159
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பண்டாரகம பிரதேசத்தில் படகு கவிழ்ந்து இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர். பண்டாரகம அடலுகம கல்ஹேன பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. படகு ஓட்டிக் கொண்டிருந்த போது படகு கவிழந்து இரண்டு இளைஞர்கள் நீரில் மூழ்கியுள்ளனர்.
நீரில் மூழ்கிய இளைஞர்களை மீட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி அவர்கள் உயிரிழந்துள்ளனர். 17 மற்றும் 21 வயதான இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் சடலங்கள் தொடர்பிலான பிரேதப் பரிசோதனை இன்றைய தினம் நடைபெறவுள்ளது.
Spread the love