குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அதி நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஸ்னைப்பர் ரக துப்பாக்கி ஒன்றை வெளிநாடொன்றிலிருந்து இலங்கையைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் தருவித்துள்ளார் என பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளார் கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். சர்வதேச பயங்கரவாதிகள் பயன்படுத்தும் அதி நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஸ்னைப்பர் ரக துப்பாக்கியே இவ்வாறு தருவிக்கப்பட்டுள்ளதாக ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
ஒன்பது மில்லிமீற்றர் ரக துப்பாக்கி என்ற அடிப்படையில் இந்த ஸ்னைப்பர் ரக துப்பாக்கி பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும் 2016ம் ஆண்டு ஜூலை மாதம் 26ம் திகதி இந்த துப்பாக்கி இலங்கைக்கு தருவிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த துப்பாக்கியைக் கொண்டு சத்தம் கேட்காமல் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட முடியும் எனவும் ஜனாதிபதி, தேசிய தலைவர்கள், பௌத்த பிக்குகள் உள்ளிட்ட பலருக்கு இந்த ஆயுதத்தினால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் ; தெரிவித்துள்ளார்.
ராஜகிரியவில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.