160
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரனுடன் இலங்கைக்கான கனடாத் தூதுவர் டேவிட் மைக்கின்னன் இன்று மாலை 5 மணிக்கு சந்தித்தார். வடக்கு மாகாண முதலமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ள கனடா தூதுவர், இன்று காலை யாழ்.மறைமாவட்ட ஆயரைச் சந்தித்திருந்த நிலையில் அவர் வடக்கு மாகாண முதலமைச்சரையும் சந்தித்தார்.
இதேவேளை, யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ள அவுஸ்திரேலியா மற்றும் பிரித்தானிய தூதுவர்களும் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனை இன்று சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தனர்.என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love