குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
‘டயலொக் கைபேசி இணைப்பு ஊடாக பின்தங்கிய பகுதி மக்கள் பணப்பரிமாற்றல்களை மேற்கொள்ள அவுஸ்திரேலிய அரசு நிதி உதவி வழங்கியுள்ளதாக அவுஸ்திரேலிய தூதுவர் தன்னிடம் தெரிவித்தார் என வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ள அவுஸ்திரேலியத் தூதுவர் பைரஸ் ஹட்ச்சனுக்கும் வடக்கு மாகாண முதலமைச்சருக்கும் இடையே இன்று முற்பகல் சந்திப்பு இடம்பெற்றது. இந்தச் சந்திப்புத் தொடர்பில் கருத்து வெளியிட்ட போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவித்ததாவது:
‘மிகவும் பின்தங்கிய பிரதேச மக்கள. கைபேசி ஊடாக பணப்பரிமாற்றல்களைச் செய்யும் வசதியை டயலொக் தொலைபேசி இணைப்பு நிறுவனத்துடன் இணைந்து அவுஸ்திரேலிய அரசு முன்னெடுத்துள்ளது.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் முதல் கட்டமாக 20 இடங்களில் இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. அந்த இடங்களில் இந்த சேவையைப் பெறுவதற்கான அலுவலகங்கள் அமைக்கப்படும். யாழ்ப்பாண மாவட்டத்தில் எதிர்காலத்தில் 200 இடங்களில் இந்தச் சேவை அலுவலகங்கள் அமைக்கப்படவுள்ளன.
ஏரிஎம் இயந்திரங்கள் ஊடாக பணத்தை மீளப்பெறுது போன்றும் சிடிம் இயந்திரங்கள் ஊடாகப் பணத்தை வைப்பில் இடுவது போன்றும் இந்த அலுவலகங்கள் ஊடாக கைபேசி இணைப்பின் ஊடாகப் பணத்தைப் பரிமாற்ற முடியும்’ என அவுஸ்திரேலியத் தூதுவர் தன்னிடம் கூறினார் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்