168
கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணையின் மதகு முழுமையாக உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அணையின் பாதுகாப்பு கருதி பிரதான 5 மதகுகளில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் வினாடிக்கு 15,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலு்ம் தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Spread the love