குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அடுத்த ஆண்டின் முதல் கிரான்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டித் தொடரான அவுஸ்திரேலிய ஓபன் போட்டித் தொடரில் , முதனிலை டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் பங்கேற்பதில் நிச்சயமற்றத்தன்மை நீடித்து வருகின்றது. செரீனா இந்தப் போட்டியில் பங்கேற்பாரா என்பது குறித்து இன்னமும் அவர் தீர்மானிக்கவில்லை.
இரண்டு மாத கர்ப்பிணியாக இருந்த போது வில்லியம்ஸ் மல்பர்னில் நடைபெற்ற டென்னிஸ் போட்டித் தொடரில் வெற்றியீட்டியிருந்தார். செப்டம்பர் மாதம் குழந்தையை பெற்றெடுத்த வில்லியம்ஸ் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள அவுஸ்திரேலிய ஓபன் போட்டியில் பங்கேற்பதனை இன்னமும் உறுதி செய்யவில்லை. செரீனா வில்லியம்ஸ் தற்போது பயிற்சிகளில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, உலக டென்னிஸ் தர வரிசையில் 12ம் நிலையை வகிக்கும் ரஸ்யா டென்னிஸ் வீராங்கனை குஸ்னெட்சோவாவும் அவுஸ்திரேலிய ஓபன் போட்டித் தொடரில் பங்கேற்பதில் நிச்சயமற்றத்தன்மை நிலவி வருகின்றது.
கையில் ஏற்பட்ட உபாதைக்காக சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ள குஸ்னெட்சோவா, இந்தப் போட்டித் தொடரில் பங்கேற்பாரா என்பது சந்தேகமே எனத் தெரிவிக்கப்படுகிறது.