குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
காலநிலை சீர்கேடு காரணமாக நான்கு மாகாணங்களின் பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய, மேல், ஊவா மற்றும் தென் மாகாணங்களின் பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக இவ்வாறு பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்தின் உத்தரவிற்கு அமைய விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, விமான மற்றும் ரயில் போக்குவரத்தும் காலநிலை சீர்கேட்டினால் பாதிக்கப்பட்டுள்ளது. கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட வேண்டிய இரண்டு விமானங்கள் மத்தள விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.