குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பலவந்த தடுத்து வைப்புக்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் அமைப்பின் பிரதிநிதிகள் குழு இலங்கைக்கு வரவுள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமை இந்தப் பிரதிநிதிகள் குழு இலங்கைக்கு வரவுள்ளதாகவும் எதிர்வரும் 4ம் திகதி முதல் 15ம் திகதி வரையில் இந்தப் பிரதிநிதிகள் இலங்கையில் தங்கியிருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
பலவந்த தடுத்து வைப்புக்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் அமைப்பின் செயற்குழு உறுப்பினர்களான ஜோஸ் அண்டோனியோ குவாவர பெர்முடெஸ் ( José Antonio Guevara Bermúdez ) லே ரூம்மே ( Leigh Toomey ) மற்றும் எலினா ஸ்டீனேர்ட் ( Elina Steinerte ) ஆகியோர் இலங்கைக்கு பயணம் செய்ய உள்ளனர்.
தடுத்து வைக்கப்பட்டுள்ள நபர்களின் நிலைமைகள் குறித்து நேரடியாக அறிந்து கொள்ளும் நோக்கில் இந்தப் பிரதிநிதிகள் இலங்கைக்கு பயணம் செய்ய உள்ளனர். சிறைக்கூடங்கள், காவல்துறை சிறைச்சாலைகள், மனநலம் பாதிக்கப்பட்டோரை தடுத்து வைக்கும் காப்பகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு நேரில் சென்று இவர்கள் தகவல்களை திரட்ட உள்ளனர்.
வடக்கு, கிழக்கு உள்ளிட்ட மாகாணங்களுக்கும் செல்லவுள்ள
இந்தப் பிரதிநிதிகள் நிலைமைகளை கண்காணித்ததன் பின்னர் எதிர்வரும் 15ம் திகதி விசேட ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்த உள்ளனர்.