குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-
ஜே.என்.பி.யின் தலைவரும் முன்னாள் வீடமைப்பு அமைச்சருமான விமல் வீரவன்சவிற்கு எதிராக லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழு வழக்குத் தாக்கல் செய்துள்ளது. இன்றைய தினம் கொழும்பு உயர் நீதிமன்றில் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் அமைச்சுப் பதவி வகித்த போது வெளியிடப்பட முடியாத வருமான வழிகளின் மூலம் 75 மில்லியன் ரூபா பணம் சம்பாதித்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த பணம் குறித்த வருமான வழிகளை விமல் வீரவன்ச தெளிவுபடுத்தவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வாகனங்களை துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரிலும், கடவுச்சீட்டு மோசடி தொடர்பிலும் விமல் வீரவன்சவிற்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
விமல் வீரவன்சவிற்கு எதிராக லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழு வழக்கு:-
140
Spread the love