குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்பின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக்கேல் ஃப்ளைன் ( Michael Flynn ) தாம் பொய்யுரைத்ததாக ஒப்புக்கொண்டுள்ளார். ஜனவரி மாதம் எப்.பி.ஐ இற்கு தாம் பொய்யான தகவல்களை வழங்கியதாக ஒப்புக் கொண்டுள்ளார்.
ரஸ்ய தூதுவருடனான சந்திப்பு குறித்து வெள்ளை மாளிகையை பிழையாக வழிநடத்திய காரணத்திற்காக மைக்கேல் ஃப்ளைன் பணி நீக்கப்பட்டிருந்தார். ட்ராம்ப் பதவி ஏற்றுக் கொள்ள முன்னதாகவே அவர் பணி நீக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தெரிந்து கொண்டே தாம் போலியான, பொய்யான தகவல்களை வழங்கியதாக ஒப்புக்கொண்டுள்ளார். மைக்கேல் ஃப்ளைன் நீதிமன்றில் தாம் குற்றமிழைத்ததாக ஒப்புக்கொண்டமை ட்ராம்பையும் பாதிக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.