நவீன தகவல் சாதனங்கள் தீவிரவாதிகளுக்கும் உதவுகின்றன எனவும் இதனைக் கட்டுப்படுத்த வேண்டும் எனவும் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். இந்தியாவின் டெல்லியில் இடம்பெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வளர்ச்சியடைந்து வரும் உலகில் இடைவெளிகளை நிரப்பும் பாலமாக தொழில்நுட்பம் உள்ள போதும் தொழில்நுட்பத்தின் திடீர் வளர்ச்சியினால் பல்வேறு இணையதளங்கள் மக்களுக்கு தீய செய்திகளைப் புகட்டுகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளர்h.
மேலும் நவீன தகவல் சாதனங்கள் தீவிரவாதிகளுக்கும் உதவுகின்றன எனவும் தீயவர்களும் சமூக விரோத சக்திகளும் நவீன தகவல் சாதன வசதிகளை பயன்படுத்திக் கொள்கின்றன எனவும் சுட்டிக்காட்டியுள்ள ஒபாமா ஜனநாயகத்தைக் காப்பாற்ற இதைக் கட்டுப்படுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.