முதல் தர கிரிக்கட் போட்டிகளில் மிக வேகமாக 300 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டவர் என சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. தென் ஆபிரிக்க வீரர் மார்கோ மராயிஸ் என்ற வீரர் இந்த சாதனையை படைத்துள்ளார். கிழக்க லண்டனில் நடைபெற்ற முதல் தரப் போட்டியொன்றில் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. போர்டர் கழகத்திற்கும் கிழக்கு மாகாண கழகத்திற்கும் இடையிலான போட்டியின் போது மார்கோ சாதனையை நிகழ்த்தியுள்ளார். 191 பந்துகளில் 300 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டு மார்கோ சாதனைப் படைத்துள்ளார்.
96 ஆண்டுகளாக முறியடிக்கப்படாமிலிருந்த சாதனையே மார்கோவினால் முறியடிக்கப்பட்டுள்ளது. 96 ஆண்டுகளுக்கு முன்னதாக அவுஸ்திரேலியாவின் சார்ளஸ் மெகார்டினியினால் அதிவேக 300 ஓட்டங்கள் என்ற சாதனை நிலைநாட்டப்பட்டிருந்தது. 1921ம் அண்டில் நொட்டிங்ஹம்சயார் கழகத்திற்கு எதிராக 221 பந்துகளில் 300 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டு சார்ளஸ் சாதனை படைத்திருந்தார். மார்க்கோவின் 300 ஓட்டங்களுக்கு 35 பவுண்டரிகள் மற்றும் 13 சிக்ஸர்கள் உள்ளடக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.