கூட்டாச்சி அரசாங்கத்தைப் போல சிறிய அரசாங்கத்தை அறிமுகப்படுத்திக் கொடுப்போம் என பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். கட்சி சார்பில்லாமல் நாடு என்ற ரீதியில் சிறந்த இலக்கை அடைவதே நோக்கமாக இருக்கவேண்டும் என்றார்.
இன்று நல்லாட்சி அரசாங்கமானது கூட்டரசாங்கமாகும் எனவும் நடைபெறவிருக்கும் பிரதேசசபைப் தேர்தலின் பின் குட்டி அரசாங்கமும் எம்மோடு இணைவது நல்லதுதானே என நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்கவியளர்களை சந்தித்த போது அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் நாட்டின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான ஒரே ஒரு வழி கட்சிவேறுபாடின்றி அதிகாரத்தை பகிர்ந்தளித்து எதிர்காலத்தை நோக்கிச் செல்வதே நாட்டுக்குச் சிறந்ததாகும் எனவும் அவர் தெரிவித்துள்ள்ளார்.
இந்த நாட்டின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு கட்சி அரசியலை ஓருபக்கத்தில் வைத்துவிட்டு எல்லோரும் ஒன்றிணையவேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து நாடு என்ற ரீதியில் செயற்படவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பிரதேச சபை என்றோ நகரசபை என்றோ மாநகர சபை என்றோ பிரித்து பார்க்க முடியாது எனவும் இதைவிட்டு அரசியல் செய்யபவர்கள் நாட்டை அழிப்பதற்கு சமன் எனவும் இது கடந்த காலங்களில் இடம்பெற்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால் 2015ஆம் ஆண்டுக்குப் பின் நாங்கள் அரசாங்கத்தை அமைத்த பின்பு சிறந்த வழிவகைகளை அறிமுகப்படுத்தியுள்ளோம். அதை நடைமுறைப்படுத்தும் போது சில சில குறைபாடுகளும் ஏற்படும். அந்த குறைபாடுகளை நிவர்த்தி செய்து தொடர்ந்து செல்வதே மிக முக்கியமான வேலையாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் சுதந்திர கட்சியும் கூட்டு எதிர்க்கட்சியும் ஓன்றினைவார்களா என ஊடகவியளாளர்களால் எழுப்பப்பட வினாவுக்கு பதிலளித்த அமைச்சர் ஒன்றினைவதற்கு முன் மக்கள் கொடுத்த ஆணையை மறந்துவிடக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.