குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-
கிளிநொச்சி இரணைமடு குளத்தின் அருகில் இருந்த புத்தர் சிலை அகற்றப்பட்டுள்ளது. இரணைமடு குளத்தின் பொறியியளாலர்கள் அலுவலகம் உள்ள கட்டடத்தில் யுத்தத்தின் பின்னர் இராணுவத்தினரால் தங்களின் தேவைக்காகவும் யுத்தம் முடிவுற்ற பின்னர் இரணைமடு குளத்தினை பார்வையிடுவதற்கு பெரும் திரளான சிங்கள மக்கள் வருவதுண்டு அவர்களின் வழிப்பாட்டுக்காகவும் அமைக்கப்பட்டதாக கூறப்படும் புத்தர் சிலையே அகற்றப்பட்டுள்ளது.
இரணைமடு குளத்தின் வான் கட்டுக்கு அருகில் இருந்த பொறியியலாளர் பணிமனை கட்டிடத்தை யுத்தத்திற்கு பின்னர் இராணுவத்தினர் பயன்படுத்தி வந்தனர். சில மாதங்களுக்கு முன் இராணுவத்தினர் அங்கிருந்து வெளியேறிய நிலையில் குறித்த இடத்தில் காணப்பட்ட புத்தர் சிலை மாத்திரம் காணப்பட்டது. தற்போது குறித்த புத்தர் சிலையும் அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.