குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் கூட்டு எதிர்க்கட்சியும் தனித்தனியாக தேர்தலில் போட்டியிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் உள்ளராட்சி மன்றத் தேர்தலில் தனித் தனியாக போட்டியிடுவதற்கு இரண்டு தரப்புக்களும் தீர்மானித்துள்ளன.
கூட்டாக இணைந்து போட்டியிடுவது குறித்து இரண்டு தரப்புக்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் வெற்றியளிக்காத காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. ஆளும் கட்சியில் அமைச்சுப் பதவி வகிக்கும் சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் பதவி விலக வேண்டுமென்ற நிபந்தனையே பேச்சுவார்த்தைகள் தோல்வியடையக் காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
சுதந்திரக் கட்சி தலைமையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு தேர்தலில் களமிறங்க உள்ளது. கூட்டு எதிர்க்கட்சி ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையில் தேர்தலில் களமிறங்க உள்ளது.