Home இலங்கை சர்வதேச சட்டமொன்றின் அடிப்படையில் கிங்தொட்டவில் 22 பேர் கைது

சர்வதேச சட்டமொன்றின் அடிப்படையில் கிங்தொட்டவில் 22 பேர் கைது

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

சர்வதேச சட்டமொன்றின் அடிப்படையில் கிங்தொட்டவில் அண்மையில் 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 2007ம் ஆண்டு 56ம் இலக்க சர்வதேச சிவில் மற்றும் அரசியல் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அண்மையில் கிங்தொட்ட பிரதேசத்தில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்படையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையில் இந்த சட்டத்தின் கீழ் இதற்கு முன்னர் எவரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சட்டத்தின் கீழ் கைதானவர்களுக்கு உயர் நீதிமன்றின் ஊடாகவே பிணை  கோரப்பட முடியும் எனவும், உச்சபட்சமாக பத்தாண்டு கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More