Home பல்சுவை சரிக்காவிடம் மைக்கேல் கார்சலை அறிமுகப்படுத்தினார் சுருதிஹாசன் – திருமணத்திற்கான ஏற்பாடா?

சரிக்காவிடம் மைக்கேல் கார்சலை அறிமுகப்படுத்தினார் சுருதிஹாசன் – திருமணத்திற்கான ஏற்பாடா?

by admin

நடிகர் கமலஹாசன் சரிகா தம்பதிகளின் மகள் சுருதிஹாசன் தனது நெருங்கிய நண்பரான லண்டனைச் சேர்ந்த மைக்கேல் கார்சல் என்பவரை தனது தாயார் சரிக்காவுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார் என இந்திய சினிமாத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுருதிஹாசன் தமிழ், தெலுங்கு, கிந்தியில் Busy ஆக நடித்தவர். இறுதியாக அவருடைய தந்தை கமலஹாசனுடன் ‘சபாஷ் நாயுடு’ படத்தில் நடித்து வந்தார். தற்போது அந்த படப்பிடிப்பு பிற்போடப்பட்டு உள்ளது. புதிய படங்களிலும் இணையவில்லை. விரைவில் 2 படங்களில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இதேவேளை சுருதிஹாசன் லண்டனைச் சேர்ந்த அவருடைய நண்பர் மைக்கல் கார்சலுட்ன நெருக்கமாக பழகி வருவதற்கான அடையாளங்களாக இருவரும் ஒன்றாக இருக்கும் படங்கள் வெளியாகி வருகின்றன. அவரை சுருதிஹாசன் காதலிப்பதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளி வருகின்றன.

இந்த நிலையில், நண்பர் மைக்கேல் கார்சலை தனது தாயார் சரிகாவிடம் சுருதிஹாசன் அறிமுகம் செய்து வைத்துள்ளார். அவரை சரிகா பூங்கொத்து கொடுத்து வரவேற்பது போன்ற புகைப்படம் கிந்தி ஊடகங்களில் வெளியாகி உள்ளன.

சுருதிஹாசன் விரைவில் மைக்கலை திருமணம் செய்ய இருக்கிறார். அதற்காகவே இந்த சந்திப்பு நடந்துள்ளது என்று கூறப்படுகிறது. இதுபற்றி சுருதிஹாசனிடம் கேட்டபோது, “தனிப்பட்ட வாழ்க்கை பற்றி எதுவும் பேச விரும்பவில்லை” என்று பதில் அளித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More