167
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அமெரிக்க உளவுப் பிரிவான எப்.பி.ஐ உளவுப் பிரிவை விமர்சனம் செய்தமை குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்பிற்கு கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது. எப்.பி.ஐ யின் முன்னாள் பொறுப்பாளர் ஜேம்ஸ் கொமி மற்றும் முன்னாள் சட்ட மா அதிபர் சாலி யாடேஸ் ஆகியோரை ட்ராம்ப் பணி நீக்கியிருந்தார்.
அமெரிக்க ஜனாதிபதி ட்ராம்பின் விமர்சனங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் அமையவில்லை என குடியரசு கட்சியின் செனட்டர் லின்ட்சே கிரஹாம் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி அமெரிக்க நீதித்துறையில் டுவிட்கள் மூலம் தலையீடு செய்ய முயல்வதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
Spread the love