Home இந்தியா மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு தினம் இன்று…

மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு தினம் இன்று…

by admin

மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் தமிழக முதலமைச்சர், துணை- முதலமைச்சர் ஆகியோர் மௌனமாக ஊர்வலமாக சென்று மலர்தூவி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

ஜெயலலிதா மறைந்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ளது. உடல் நலம் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் 75 நாட்கள் சிகிச்சைக்கு பின் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5ம்திகதி அவர் உயிரிழந்தார்.

இந்தநிலையில்  முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்று அ.தி.மு.க.வினரால் அனுசரிக்கப்பட்டதுடன் அவரது சமாதியில் மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியும் மௌன ஊர்வலமும் நடைபெற்றுள்ளது.

ஜெயலலிதா நினைவு நாளையொட்டி மெரினா கடற்கரையில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டதாகவும் அவரது சமாதியில் பெண்கள் சிலர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.வினர் ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி செலுத்திய பின் டி.டி.வி.தினகரன் அணியினரும் சமாதியில் அஞ்சலி செலுத்தியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More