குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மியன்மாரில் ரோஹினிய முஸ்லிம்கள் இனச் சுத்திகரிப்பு செய்யப்படவில்லை என கூற முடியாது என ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹூசெய்ன் தெரிவித்துள்ளார். மியன்மார் அரச படையினர், அந்நாட்டின் ரான்கீன் மாநிலத்தில் வாழ்ந்து வரும் ரோஹினிய முஸ்லிம்களை இனச் சுத்திகரிப்பு செய்தாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுக்களை முற்று முழுதாக நிராகரிக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மனித உரிமை நிலைமைகள் குறித்து கண்காணிக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.