மார்கழி மாதம் 6ம் திகதி எமது மூதாதையர்கள் விழா பூசக்தி கேந்திர நிலையத்திலும் மற்றும் ஆடிஜன் பஞ்சாயத்து இயக்கம் தும்கூரிலும் கொண்டாடப்படவுள்ளது . இவ் இயக்கங்களின் தலைவர்களும் , ஒருங்கிணைப்பாளர்களும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இவ் விழாவில் நீங்களும் உங்களது குடும்பமும் நமது தாய் பூமியினதும் மூதாதையர்களினதும் நல்லாசியினைப் பெற இறைவனை பிராத்திக்கின்றேன்.
பொதுவாக ஆதிஜன் கலாச்சாரத்தில்.கூறப்படுவது யாதெனில் நம் மூதாதையர்கள் எங்களிடமிருந்து மரணிக்கவில்லை , மாறாக வெறும் உடல் அளவில் மட்டுமே எம்மை விட்டுப்பிரிந்தாலும் ஏதோ ஒரு சக்தி வடிவில் எம்முடன் இருந்து காக்கின்றனர். குறிப்பாக எமது மூதாதையர்கள் வாழ்ந்த காலத்தில் செய்த நன்மைகளின் பன்மடங்கினை இறந்த பின்னர் ஆற்றுகின்றனர்.
எமது மூதாதையர்களின் இறப்பு என்பது , அவர்கள் எம்மை விட்டு முழுமையாக நீங்கி விடுவது பொருளல்ல , மாறாக அவர்கள் இறந்த பின்னரான செயற்பாடுகள் எம்முடனான ஒன்றிணைவையே குறிக்கின்றன. பொதுவாக ஒரு குடும்பத்தில் மூதாதையர் ஒருவர் இறப்பாராயின் அவர் முழு சமூகத்தின் செல்வமாகிவிடுகிறார். அவரோ ஃ அவளோ அனைத்து நல்ல உள்ளம் கொண்ட இதயங்களிலும் வாழ ஆரம்பித்து விடுகிறார்கள். இவ்வாறான ஒரு கட்டத்தில் எங்கள் மூதாதையர்களிடமிருந்து பெறப்பட்ட ஆற்றல் நம் வாழ்வில் மிகச் சக்தி வாய்ந்த ஆதாரமாக மாறுகின்றது.
எமது மூதாதையர்கள் எங்களுடன் பேசி எமது சமூகத்தின் நலனுக்காக வழி நடத்தி வருவதாக எம்மில் பலர் நம்புகின்றோம் . உண்மையில் அவர்கள் உயிருடன் இருந்த காலத்தில் நாம் செலுத்திய உணர்வுகளினதும் ஆசாபாசங்களினதும் அளவிலும் பார்க்க அவர்கள் இறந்த பின்னர் காட்டும் உணர்வுகளினதும் ஆசாபாசங்களினதும் அளவு அதி சக்தி வாய்ந்ததாகவும் , தீவிரமானதாகவும் மாறுகின்றது.
ஒரு கட்டத்தில் எமது மூதாதையர்களிடமிருந்து நாம் பெற்ற ஆளுமையும் வலிமையுமே நம்மை மேம்படச் செய்கின்றது . இவ்வாறான செயற்பாடகளினூடாக அறியப்படுவது யாதெனில் இ நம் மூதாதையர்கள் எங்களுடைய ஒவ்வொரு அணுவிலும் , நாடி நாளங்களிலும் புத்துணர்வுடன் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். அவையே எமது ஆளுமை வளர்ச்சிக்கும், வலிமைக்கும் உயிர் ஆதாரமாக அமைகின்றது. எல்லாமாக , மூதாதையர்கள் அவர்கள் வாழ்ந்தமைக்கு அமைவாக எமது ஆளுமை பண்புகளை வடிவமைக்கின்றனர்.
எமது மூதாதையர்கள் எமக்கு நிறைய படிப்பினைகளை விட்டுச்சென்றுள்ளனர் . அதாவது கோபம் என்னும் கொடிய விஷம் எம்மை விழுங்கிவிட நாம் ஒரு போதும் அனுமதிக்கக்கூடாது , மாறாக கோபம் என்பது எமது ஆளுமையுடன் ஒருங்கிணைந்த ஒரு பகுதி.ஆகவே கோபம் என்ற ஆயுதத்தை பயன்படுத்தி நாம் யாரையும் பழிதீர்க்கும் எண்ணம் கொள்ளுதல் கூடாது.
நாம் ஒவ்வொரு மனிதரிடையேயும் நல்லிணக்கத்தையும் , சமாதானத்தையும் எற்படுத்த வேண்டும் ஒரு காலத்தில் ஒரு சில மனிதர்கள் எமது மூதாதையர்களுக்கும் சமூகத்திற்கும் தீங்கு விளைவித்திருக்கலாம் இ ஆனால் நாம் அவற்றை மறந்து அவர்களிடத்தில் தயாள குணம் உடையவராக காணப்படவேண்டும் . இதுவே நம் முன்னோர்கள் வழியாக நாம் கற்றுக்கொண்ட பெறுமதி மிக்க செல்வமாகும்.
எங்களுடைய மூதாதையர்கள் தங்களைத் தாமே வழிநடத்திக் கொண்டார்களே தவிர அவர்கள் , மேலாதிக்கம் நிறைந்த சிந்தனை அல்லது உணர்வுகள் அல்லது ஆதிக்கம் நிறைந்த ஆட்சி முறைமை ஆகியவை தம்மை வழி நடத்த அனுமதிக்கவுமில்லை , அது காட்டிய வழியில் வாழவுமில்லை . மாறாக அவர்கள் மேலாதிக்கத்தையும் அதன் செயற்பாடுகளையும் கடுமையாக எதிர்த்து நின்றார்கள்.
இப்படி எமது மூதாதையர்களையும் , பெரியோர்களையும் நினைவு கூருவதனூடாக இளைய தலைமுறையினருக்கு பல நல்ல விடயங்களை கூற முடிகின்றது. அதாவது எமது இளைஞர்களது உயிரணுக்களை அல்லது ஆளுமையை நன்கு பட்டைதீட்டவும் இத்தகைய தயாள குணங்களை மிதமிஞ்சிய வகையில் எல்லாவற்றிற்கும் மேலாக அவர்களிடத்தில் புகுத்த முடியும்.
இவ்வாறான செயன்முறையை ஏற்றுக்கொள்வதில் வயது ஒரு காரணியாக கருதப்படுவதில்லை , மாறாக அவை மனிதர்களது உடலங்கங்கள் ஏற்றுக்கொள்ளும் அளவே பெரிதாக கருத்தில் கொள்ளப்படுகிறது. ஆகவே ஆதிஜன் சமூகத்தில் வாழ்கின்ற ஆண்களும் பெண்களும் உலக நிலைப்பாட்டை புரிந்து கொள்ள தாம் வயதில் மூத்தோராகவோ அல்லத வயதடைய வேண்டியவர்களாகவோ இருக்க வேண்டியது இல்லை. மாறாக நாம் முழுமையாக முன்னோர்களையும் அவர்களது வாழ்வியல் நெறிகளையும் அறிவோமானால் இ எம்மிடம் இவ் உலக நிலைப்பாட்டை அறியும் திறன் தானாகவே வேருன்றி விடுகின்றது.