பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் நகரில் சுமார் ஆயிரம் பேர் கொல்லப்பட்ட ஜாலியன்வாலா பாக் படுகொலைக்கு பிரித்தானியா அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என லண்டன் மாநகர மேயர் சாதிக் கான் தெரிவித்துள்ளார். சுதந்திரத்துக்கு முந்தைய காலப்பகுதியில் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் நகரில் ஜாலியன்வாலா பாக் என்ற இடத்தில் பிரித்தானிய இராணுவத்தினரால் தொடர்ந்து பத்து நிமிடங்கள் மேற்கொள்ளயப்பட்ட பீரங்கி மற்றும் துப்பாக்கிச் சூட்டில் பெண்கள், சிறுவர்கள் என சுமார் ஆயிரம் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்
இந்நிலையில், இந்த துயர சம்பவத்தை யாரும் மறந்து விடகூடாது என குறிப்பிட்டுள்ள லண்டன் நகர மேயர் சாதிக் கான், இந்த கொடூரத்துக்காக பிரித்தானிய அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு மூன்றுநாள் பயணமாக சென்றுள்ள லண்டன சாதிக் கான், ஜாலியன்வாலா பாக் பகுதியில் உள்ள நினைவிடத்தில் அந்த தாக்குதலில் பலியானவர்களுக்கு நேற்று அஞ்சலி செலுத்தியுள்ளார்
அத்துடன் அங்குள்ள வருகையாளர் பதிவேட்டில் ‘1919-ம் ஆண்டு நடைபெற்ற இந்த துயரத்தை நாம் மறந்து விட கூடாது. இதற்காக பிரித்தானிய அரசு மன்னிப்பு கேட்க வேண்டிய நேரம் இது’ என பதிவு செய்து கையொப்பமிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.