160
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஐக்கிய தேசியக் கட்சியுடனான இணக்கப்பாட்டை அவசரப்பட்டு முறித்துக் கொள்ளப் போவதில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் விளையாட்டுத்துறை அமைச்சருமான தயாசிறி ஜயசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஏற்படுத்திக் கொண்ட இணக்கப்பாட்டை அவசர அவசரமாக முடிவுறுத்திக்கொள்ளப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். தந்திரோபாய ரீதியில் நகர்வுகள் முன்வைக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
Spread the love