161
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மாலை தீவின் முன்னாள் பிரதமர் மொஹமட் நசீட், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளார். அடுத்த ஆண்டில் மாலைதீவில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. நீதியானதும் சுதந்திரமானதுமான முறையில் தேர்தல் நடத்தப்பட வேண்டுமென மாலைதீவின் முன்னாள் பிரதமர் நசீட் தெரிவித்துள்ளார்.
நசீட் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கப்படாது என அந்நாட்டு அரசாங்கம் கூறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. மாலைதீவு நீதவான் ஒருவரை கடத்தியதாக நசீட் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
Spread the love