156
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தமிழ் அரசுக் கட்சியுடன் இணைந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பாக உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதா அல்லது மாற்று அணியில் இணைந்து போட்டியிடுவதா? என்ற முடிவு பற்றி ஆராய புளொட்டின் உயமட்டக் குழு வவுனியாவில் நாளை மாலை கூடி ஆராயவுள்ளது. இந்தத் தகவலை அந்தக் கட்சியின் மூத்த உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
‘தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து ரெலோ வெளியேறியதால் தற்போது புளொட் மற்றும் தமிழ் அரசுக் கட்சியுமே சேர்ந்துள்ளன. ஆசனப் பங்கீடு தொடர்பில் எமது கட்சிக்கும் அதிருப்தி உள்ளது. இந்த நிலையிலேயே கட்சியின் உயர்மட்டம் நாளை மாலை கூடுகிறது எனவும் அவர் கூறினார்.
Spread the love