171
ஜம்மு காஷ்மீர் மாநிலம் தாங்க் பகுதியில் இன்று அதிகாலை நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. இதனால், அங்கு வசிக்கும் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர். ரிக்டர் அளவு கோலில் இந்த நிலநடுக்கம் 5.1 ஆக பதிவாகியுள்ளது.
நேற்று இரவு உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள ருத்ர பிரயாக் பகுதியில் 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் டெல்லி வரை இருந்ததாக கூறப்படுகிறது. வீடு மற்றும் அலுவலகங்களில் வசிப்பவர்கள் இந்த நில அதிர்வை உணர்ந்ததால் அச்சம் அடைந்ததாக கூறப்படுகிறது.
Spread the love