குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மத்திய வங்கி பிணை முறி தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக் காலம் எதிர்வரும் 31ம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆணைக்குழுவின் பதவிக் காலம் இன்றுடன் நிறைவடைகின்றது. இந்தநிலையில் வர்த்தமானி அறிவித்தல் மூலம் ஆணைக்குழுவின் பதவிக் காலத்தை நாளை முதல் 31ம் திகதி வரையில் ஜனாதிபதி நீடித்துள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் 27ம் திகதி இந்த ஆணைக்குழு நிறுவப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 2015ம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் 2016ம் ஆண்டு மார்ச் மாதம் வரையில் மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட மத்திய வங்கி பிணை முறி கொடுக்கல் வாங்கல்களில் பாரியளவு மோசடி இடம்பெற்றுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை நடத்தும் நோக்கில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த ஆணைக்குழுவினை நிறுவியிருந்தார்.