183
கவுதம் மேனன் சென்ற கார் லொறியுடன் மோதியதில் அவருக்கு காயமேற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகின்ற கிண்டி போக்குவரத்து காவல்துறையினர் இது தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நேற்று இரவு மாமல்லபுரத்தில் இருந்து சென்னை நோக்கி கவுதம் வாசுதேவ் மேனன் காரில் வந்து கொண்டிருந்த போது ஏற்பட்ட விபத்தில் அவரது காருக்கு பலத்த சேதமேற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மின்னலே படத்தில் இயக்குனராக அறிமுகமான கவுதம் வாசுதேவ் மேனன் வேட்டையாடு விளையாடு, விண்ணைத்தாண்டி வருவாயா, காக்க காக்க உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார்.
Spread the love