குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
துருக்கியின் ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் ( Recep Tayyip Erdogan )முதல் தடவையாக கிரேக்கத்திற்கு பயணம்; செய்துள்ளார். அறுபத்து ஐந்து ஆண்டுகளில் முதல் தடவையாக துருக்கியின் அரச தலைவர் ஒருவர், கிரேக்கத்திற்கு பயணம் செய்துள்ளமை இதுவே முதல் தடவையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
1923ம் ஆண்டில் முதலாம் உலகப் போரின் பின்னர் துருக்கியின் எல்லை நிர்ணயம் நியாயமானதாக அமையவில்லை என தெரிவிக்கப்படுகிறது. எனவே எல்லை நிர்ணயத்தை மாற்றியமைக்க வேண்டுமென துருக்கியின் பிரதமர் கோரியுள்ளார்.
எனினும்,இந்தக் கோரிக்கையை எகிப்தின் ஜனாதிபதி ப்ரோகோபீஸ் பாவ்லோபொலோஸ் ( Prokopis Pavlopoulos )நிராகரித்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மிக நீண்ட காலமாக விரிசல் நிலையில் காணப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.