165
கிளிநொச்சி இரத்தினபுரம் பகுதியில் உள்ள சில வீதிகளை புனரமைப்பு என்ற பெயரில் பயணம் செய்யக்கூடிய நிலையில் இருந்த வீதியை தற்போது பயணம் செய்ய முடியாத நிலைக்கு தள்ளியுள்ளனர் அதிகாரிகள். கடந்த சில நாட்களின் முன்னர் பெய்த கடும் மழைகாரணமாக இப் பகுதியில் வெள்ளம் ஏற்பட்டது. இந்த நிலையில் வெள்ளத்தை வெளியேற்ற நீர் வடிகாலை அமைக்க அதிகாரிகள் முற்பட்டனர்.
இதன்போது வீதியின் சில இடங்களில் கால்வாய் வெடிட்டிவிட்டு மண்ணை வீதியில் குவித்து விட்டுச்சென்றுள்ளனர். அத்துடன் சில இடங்களில் வீதிகளில் கிடங்குகளை ஏற்படுத்தியும் உள்ளனர். ஒரே ஒரு நாளில் இந்த வீதிகளை புனரமைக்க முடியாது. எனினும் ஒரே ஒரு நாளில் இருந்த வீதியையும் புனரமைப்பு என்ற பெயரில் கிண்டிக் கிளறி விட்டு அதிகாரிகள் சென்றுள்ளனர்.
இதனால் தற்போது போக்குவரத்தை மேற்கொள்ள முடியாத நிலைக்கு இவ் வீதிகள் தள்ளப்பட்டுள்ளன. வெள்ளம் வற்றிய பின்னர் தாம் பயணத்தை மேற்கொண்டு வந்த வீதி தற்போது முற்றாக பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன.
விரைவாக இந்த வீதிகளை புனரமைத்து பயணத்தை மேற்கொள்ளக் கூடிய நிலையை ஏற்படுத்து மாறு இரத்தினபுரம் மக்கள் கோரிக்கை முன் வைத்துள்ளனர்.
Spread the love