குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தமிழ் தேசிய கூட்டமைப்பு பலமான அரசியல் கட்சியாக பரிமானிக்க வேண்டும் என்பதே தனது நிலைப்பாடு என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளுக்கு இடையில் ஏற்பட்டு உள்ள பிளவு நிலை தொடர்பில் உங்கள் நிலைப்பாடு என்ன என இன்றைய தினம் வெள்ளிக்கிழமை ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கே அவ்வாறு பதிலளித்தார்.
மேலும் தெரிவிக்கையில் ,
சுயநலம் ஏற்படும் போது இவ்வாறன பிளவுகள் ஏற்படுவது வழக்கம். அதே சுயநலமே அந்த பிளவுகளை சரி செய்யவும் உதவும். 1949ஆம் ஆண்டு தந்தை செல்வா காங்கிரசில் இருந்து பிரிந்தார். யுத்தம் முடிவடையும் கால கட்டத்தில் சுயநலம் காரணமாக பிரபாகரனை விட்டு சிலர் பிரிந்தனர்.
ஆகவே பிளவுகள் கொள்கைகளில் நிமித்தம் ஏற்படும். சுயநல காரனமகாவும் ஏற்படலாம். இன்றைய பிளவு எவ்வாறு ஏற்பட்டது என்பதனை நீங்களே ஆய்ந்து அறிந்து கொள்ளுங்கள். அது அரசியல் அவதானிகளின் வேலை.
தமிழ் தேசிய கூட்டமைப்பு தனது கொள்கைகளை எமது தமிழ் மக்களின் நெடுங்கால பாதுகாப்பிற்காகவும் , அபிவிருத்திக்கும் வளர்சிக்கும் மாற்றி யாவரையும் உள்ளடக்கி ஒற்றுமையுடன் ஒரு பலமான அரசியல் கட்சியாக பரிமானிக்க வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு என மேலும் தெரிவித்தார்.