குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கென்யாவில் காவல்துறையினருக்கு பாதணி கொள்வனவு செய்வதில் மோசடிகள் இடம்பெற்றுள்ளன. காவல்துறைக்கு பொறுப்பான கென்ய அமைச்சு இந்த மோசடியில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த மோசடிகள் காரணமாக அரசாங்கத்திற்கு குறைந்தபட்சம் 1.7 மில்லியன் டொலர்கள் நட்டம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த மோசடிகள் காரணமாக காவல்துறை உத்தியோகத்தர்கள் பாதணிகள் இன்றியும், சொந்த பணத்தில் பாதணிகளை வாங்கி அணிந்தும் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பாதணிகள் கொள்வனவு செய்யப்பட்டது போன்று ஆவணங்கள் தயாரிக்கப்பட்ட போதிலும் அவை கொள்வனவு செய்யப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.