Home உலகம் ஐஎஸ் அமைப்பினருக்கு எதிரான போர் முடிந்தது – ஈராக்-சிரியா எல்லை முழுக்கட்டுப்பாட்டில்…

ஐஎஸ் அமைப்பினருக்கு எதிரான போர் முடிந்தது – ஈராக்-சிரியா எல்லை முழுக்கட்டுப்பாட்டில்…

by admin

ஐஎஸ் அமைப்பினருக்கு எதிரான போர் முடிந்துவிட்டதாக ஈராக் அறிவித்துள்ளது. ஈராக்-சிரியா எல்லையின் முழுக் கட்டுப்பாட்டையும் ஈராக்கிய படைப்பிரிவுகள் பெற்றிருப்பதாக பாக்தாத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஈராக்கின் பிரதமர் ஹைய்தர் அல்-அபாதி தெரிவித்துள்ளார்

நவம்பர் மாதத்தில், ராவா நகரை இழந்ததை தொடர்ந்து எல்லைப் பகுதியின் சில பகுதிகளே ஐஎஸ் அமைப்பினரிடம் இருந்தது. ஈராக்கிற்கு அருகிலுள்ள சிரியாவில் ஐஎஸ் அமைப்பினரை தோல்வியடைய செய்யும் நடவடிக்கையை முடித்துவிட்டதாக ரஷ்ய ராணுவம் அறிவித்த 2 நாட்களின் பின்னர் ஈராக்கின் இந்த அறிவிப்பு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தங்களை கலிபேட் (மத ரீதியில் ஆட்சி புரியும் வாரிசாக) என பிரகடனம் செய்து, ஒரு கோடி மக்கள் மீது தங்களின் ஆட்சியை திணித்த ஐஎஸ் அமைப்பு 2014ம் ஆண்டு சிரியாவிலும், ஈராக்கிலும் பெரும் பகுதியை கைப்பற்றியிருந்தது.

எனினும் கடந்த 2 வருடங்களாக தொடர் தோல்விகளை சந்தித்து வந்த ஐஎஸ அமைப்பு கடந்த ஜூலை மாதம் ஈராக்கின் 2வது நகரான மொசூலையும், அதனுடைய நடைமுறை தலைநகராமாக விளங்கிய சிரியாவின் வட பகுதியில் இருக்கும் ரக்காவையும் இழந்திருந்தது.

இந்தநிலையில் சில ஐஎஸ் அமைப்பினர் சிரியாவின் நாட்டுப்புறங்களுக்கு பிரிந்து சென்றுவிட்டதாகவும் ஏனையோர்; துருக்கி எல்லையை கடந்து தப்பிவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More