இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் இன்று முதற்கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், தண்ணீர் பற்றாக்குறையை கண்டித்து ஒரு கிராமத்தில் ஒருவர் கூட வாக்கு போடவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.
குஜராத் மாநில சட்டசபைக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகி;னற நிலையில் முதற்கட்டமாக 89 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் மோர்பி மாவட்டம், கஜாதி கிராமத்தைச் சேர்ந்த வாக்காளர்களில் ஒருவர்கூட இன்று வாக்குபோடவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. ஜாம்நகர் மாவட்டம் கலாவத் தொகுதியின் கீழ் உள்ள இந்த கிராமத்தில் 1000 வாக்காளர்கள் உள்ளனர். குடிநீர் பற்றாக்குறைக்கு எதிர்ப்பு தெரிவித்து அனைவரும் ஒட்டுமொத்தமாக தேர்தலை புறக்கணித்துள்ளனர். வாக்குப் போட வைக்க தங்களால் இயன்ற முயற்சிகளை செய்ததாக மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது.
அம்மக்களின் பிரதான குறை குடிநீர் விநியோம்தாக் எனவும் பைப்லைன் மூலம் வழங்கப்பட்ட போதாது, இன்னெரு பைப்லைன் வேண்டும் என்று கேட்டனர். இதற்கு பதிலளிக்காத அதிகாரிகள் அதிகாரிகள் கிராமத்திற்கு சென்று வாக்குப் போடும்படி வலியுறுத்திய போதும் ஒருவர் கூட வாக்களிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது