குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ரஸ்யாவிற்கு எதிரான ஒலிம்பிக் தடை குறித்து இணையத்தில் பிரச்சாரம் செய்யப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சாதாரண ரஸ்ய பொதுமக்கள் இந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பை வெளியிட்ட போதிலும் இணையத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் பிரச்சாரங்கள் கணனி மயப்படுத்தப்பட்ட ஓர் பொறிமுறைமை என தெரிவிக்கப்படுகிறது.
ஊக்க மருந்து சட்டங்களுக்கு மதிப்பளிக்காத காரணத்தினால் ரஸ்யா, தென்கொரியாவில் அடுத்த ஆண்டு ஆரம்பமாக உள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடைக்கு எதிராக குரல் கொடுக்கும் நோக்கில் ரோபோக்களைக் கொண்டு டுவிட்டர் கணக்குகளில் கருத்துக்கள் பதிவிடப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.