ஜெர்மனியின் தலைநகர் பெர்லினுக்கு அருகே உள்ள அல்வின் என்ற சிறிய கிராமம் ஏலம் மூலம் 105 லட்சம்; பவுண்களுக்கு விற்பனை செய்யப்பட்டது. தனியார் வசம் காணப்பட்ட குறித்த இக்கிராமம் நேற்று ஏலம் மூலம் விற்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் கர்குசேன் என்ற ரியல் எஸ்டேட் உரிமையாளர் 85 ஆயிரம் பவுண்களுக்கு ஏலத்தினை ஆரம்பிக்க படிப்படியாக உயர்த்தப்பட்டு முடிவில் அந்த கிராமம் 105 லட்சம் விற்பனை செய்யப்பட்டுள்ளது
இந்த கிராமத்தில் தற்போது 20 முதியவர்கள்;மட்டுமே உள்ளனர். பெரும்பாலான வீடுகள் இடிந்த நிலையில் உள்ளதாகவும் இக்கிராமம் பெர்லினில் இருந்து 120 கி.மீற்ற் தூரத்தில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது . 1990-ம் ஆண்டு கிக்கு மற்றும் மேற்கு ஜேர்மனி ஒன்றாக இணைந்தது. அதற்கு முன்பு கிழக்கு ஜெர்மனியில் கம்யூனிஸ்ட் ஆட்சி நடைபெற்றது. இங்கு ஒரு தொழிற்சாலை காணப்பட்டது.
இந்தநிலையில் ஜெர்மனி இணைக்கப்பட்டதன் பின்னர் கிழக்கு ஜேர்மனியில் இருந்தவர்கள் மேற்கு ஜெர்மனி நகரங்களுக்கு இடம்பெயர்ந்து விட்டதனால் அந்த தொழிற்சாலை மூடப்பட்டது எனவே இந்த கிராமம் மக்களின்றி காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.