குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஊழல் மோசடிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு வெளிநாட்டு நிபுணர்களின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்படும் என சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரட்நாயக்க தெரிவித்துள்ளார். ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை நடாத்துவதற்கு வெளிநாட்டு நிபுணர்களின் ஒத்துழைப்பு அவசியம் என தெரிவித்துள்ள அவர் விசாரணைகளில் சில குறைபாடுகள் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
சில சவால்களை வெற்றிகொள்ள வேண்டிய கட்டாயம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டியுள்ள அவர் தாமதம் இன்றி குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் தண்டிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். சில ஊழல் மோசடிகள் மிகவும் திட்டமிட்ட அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவை தொடர்பிலான விசாரணைகள் அவசர அவசரமாக மேற்கொள்ள முடியாது எனவும் தெரிவித்துள்ள சாகல ரட்நாயக்க நிபுணத்துவ ஒத்துழைப்புடன் கிரமமான அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.