குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தம்மை தொடர்பு கொண்டதாக முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். சில ஆண்டுகளின் பின்னர் முதல் தடவையாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தொலைபேசி மூலம் தம்மை தொடர்பு கொண்டு பேசியதாகயவும் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து பேசப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
என்ன என்ன விடயங்கள் பற்றி பேசப்பட்டது என்பது பற்றிய விபரங்களை அவர் வெளியிடவில்லை எனினும் மெதகொட அபயதிஸ்ஸ தேரரின் தலையீட்டின் அடிப்படையில் இந்தப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளின் பின்னரே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் தாம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாகத் தெரிவித்துள்ளார்.
பிணைமுறி மோசடி, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகளினால் அரசாங்கத்தின் மீது மக்கள் அதிருப்தி கொண்டுள்ளதாகவும் பசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.