குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஹம்பாந்தோடடை துறைமுகம் சீனாவிற்கு வழங்கப்பட்டமை குறித்து அமெரிக்கா, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஹம்பாந்தோட்டை துறைமுகம் உத்தியோகபூர்வமாக இலங்கையினால் சீனாவிற்கு வழங்கப்பட்டுள்ளது. வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்கில் இந்த துறைமுகம் வழங்கப்பட்டுள்ளது.
2010ம் ஆண்டு அங்குரார்ப்பணம் செய்யப்பட்ட இந்த துறைமுகம் தொடர்ச்சியாக நட்டத்தை எதிர்நோக்கி வந்த காரணத்தினால், அரசாங்கம் துறைமுகத்தை வெளிநாடு ஒன்றுக்கு வழங்கத் தீர்மானித்திருந்தது. எனினும், இவ்வாறு துறைமுகத்தை சீனாவிடம் வழங்கப்படுவதற்கு அமெரிக்கா, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் அதிருப்தி வெளியிட்டுள்ளன. இந்த துறைமுகத்தினை சீனா தனது பாதுகாப்பு நோக்கங்களுக்காக பயன்படுத்தக்கூடும் என தெரிவித்துள்ளன.