இந்தியாவின் மேகாலயா மற்றும் காஷ்மீரில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மேகாலயாவில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.7 ஆக பதிவாகியுள்ளது. அதேவேளை ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் இந்தியா-சீனா எல்லையில் அமைந்துள்ள லடாக் பகுதியில் அதிகாலை 4:28 மணிக்கு இடம்பெற்ற இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவாகியிருந்ததாக இந்திய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது பூமிக்கடியில் 33 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.
இந்த நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கியதாகவும் இதனால் மக்கள் பாதுகாப்புக்காக வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் கூடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் ஏற்படவில்லை பாதிக்கள் குறித்து தகவல்கள் வெளியிடப்பட்வில்லை. நேற்று இரவும் குறித்த பகுதியில் ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.